15 வயது சிறுமியை கடத்திச் சென்ற ரத்மல்கஹஹெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
இந்த சிறுமி கிண்ணியாகலை காவல்துறை பிரிவில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் காதல் உறவைப் பேணி வந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி இரவு தாயுடன் உறங்கச் சென்ற நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் முன் மோட்டார் சைக்கிள் இயங்கும் சத்தம் கேட்டு தாய் எழுந்து பார்த்தபோது மகள் வீட்டில் இல்லை.
தாய்க்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய மகள்
மறுநாள் காதலன் வீட்டில் தங்க முடியாது என்று மகள் தாய்க்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பில் தாய் கரடுகலகாவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுமி கிண்ணியாகலை ரத்மல்கஹெல்ல சந்தேக நபரின் வீட்டில் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தலைமறைவானது தெரியவந்துள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதி
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கரடுகல மற்றும் கிண்ணியாகலை காவல் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.