தைவான் மீதான பாரிய ஏவுகணை தாக்குதல் தொடர்பான உருவகப்படுத்தல் காணொளிகளை சீன ஊடகம் ஒன்று வெளியிட்டு இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தீவு நாடான தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என உரிமை கொண்டாடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், தைவான் அமெரிக்காவுடனான நட்புறவை வளர்த்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் வலுவான ஆதரவு வேண்டி, தைவான் அதிபர் சாய் இங்-வென்(Tsai Ing-wen) கலிபோர்னியாவில் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி-யை(Kevin McCarthy) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மூன்று நாள் ராணுவ போர் ஒத்திகை
தைவானின் இந்த செயல் சீனாவுக்கு ஆத்திரமூட்டிய நிலையில், தைவான் ஜலசந்தி பகுதியை சுற்றி ஏப்ரல் 8 முதல் 10ம் திகதி வரை சீனா மூன்று நாள் ராணுவ போர் ஒத்திகையை நடத்தி வருகிறது.
இரண்டாவது நாள் ஒத்திகையின் போது தைவானை நோக்கி சீனா டஜன் கணக்கான போர் விமானங்கள் மற்றும் எட்டு போர் கப்பல்களை அனுப்பி வைத்தது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
Chinese media showed a simulation of a massive missile strike on #Taiwan@MeghUpdates @mananbhattnavy @InsightGL @srdmk01 pic.twitter.com/txLmnOkjzb
— Harish Rawat (@HarishR1990) April 10, 2023
இந்நிலையில், தைவான் மீதான மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் குறித்த உருவகப்படுத்துதல் காட்சிகளை சீன ஊடகம் ஒன்று காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.