உலக கோப்பை வென்ற ஆர்ஜன்ரீன அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக மொத்தம் 35 தங்க ஐஃபோன்களை கப்டன் லியோனல் மெஸ்ஸி பரிசாக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மேலும் வெளியான தகவல்களின் படி, ஒவ்வொரு வீரரின் பெயர், எண் மற்றும் ஆர்ஜன்ரீன லோகோ உள்ளிட்டவை பொறிக்கப்பட்டு தனித்துவமான வகையில் இந்த ஐபோன் ஓடர் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மெஸ்ஸியின் வீட்டிற்கு சென்ற தங்க ஐபோன்கள்
மேலும் மெஸ்ஸி ஓடர் செய்த இந்த ஐபோன்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தங்க ஐபோன்கள் உருவாக்கிய iDesign Gold என்ற நிறுவனம், மெஸ்ஸி ஓடர் செய்த ஐ போன்கள் பற்றி பேசுகையில், இந்த அற்புதமான வெற்றியை கொண்டாட அனைத்து வீரர்களுக்கும் சிறப்பு பரிசு வேண்டும் என்று மெஸ்ஸி கூறியதாகவும், வழக்கமான பரிசாக விரும்பாமல் இருக்க வேண்டும் என அவர் கூறியதால் தங்க ஐபோன்களில் பெயர் பொறிக்கப்பட்ட திட்டத்தை பரிந்துரை செய்ததும் மெஸ்ஸி அதனை விரும்பி ஏற்பாடுகளை கவனிக்க சொன்னதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.