Vijay - Favicon

இந்த அணிதான் வெல்லும் – பந்தயம் கட்டிய தாத்தாவுக்கு அடித்த அதிஷ்டம்


அமெரிக்காவை சேர்ந்த 71 வயதான தொழிலதிபரான தாத்தா ஒருவர் பேஸ்போல் போட்டியில் பந்தயம் கட்டி இமாலய பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். இதுவரையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது கிடையாது என்கிறார்கள் அதிகாரிகள்.

 அமெரிக்காவில் பிரபலமானது பேஸ்போல் போட்டிகள். இதனை காண எப்போதுமே மக்களிடத்தில் ஒரு தீரா ஆர்வம் இருந்துவருகிறது. அண்மையில் அமெரிக்காவில் பேஸ்போல் World Series நடைபெற்றது. வழக்கமான போட்டிகளுக்கே கூட்டம் அலைமோதும் எனும்போது World Series என்றால் சொல்லவா வேண்டும்?.

10 மில்லியன் அமெரிக்க டொலர் பந்தயம்

இந்த அணிதான் வெல்லும் - பந்தயம் கட்டிய தாத்தாவுக்கு அடித்த அதிஷ்டம் | Mattress Mack Wins 75M Usd

ஆனால், இந்த தொடரை தனக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த ஜிம் மெக்வேல் எனும் தொழிலதிபர்.



தற்போது 71 வயதாகும் ஜிம் மெக்வேலை Mattress Mack என்றும் அழைக்கிறார்கள். தளபாட பொருட்களின் விற்பனையகத்தை நடத்திவரும் ஜிம் மெக்வேல், டெக்சாஸை சேர்ந்த பிரபல பேஸ்போல் அணியான ஹூஸ்டன் ஆஸ்ட்ரோஸ் (Houston Astros) அணியின் மிகத் தீவிரமான ரசிகர். இவர் World Series -ஐ முன்னிட்டு தனக்கு பிடித்த அணியான ஹூஸ்டன் ஆஸ்ட்ரோஸ் இந்த தொடரில் வெற்றிபெறும் என 10 மில்லியன் அமெரிக்க டொலரை பந்தயம் கட்டியிருக்கிறார்.






முதலில், 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை பந்தயம் கட்டியிருந்த அவர், அதன்பிறகு 7 மில்லியன் டொலரை பந்தயமாக கட்டியிருக்கிறார்.

வென்றது அணி அடித்தது பணமழை

இந்த அணிதான் வெல்லும் - பந்தயம் கட்டிய தாத்தாவுக்கு அடித்த அதிஷ்டம் | Mattress Mack Wins 75M Usd

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் Philadelphia Phillies அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது ஹூஸ்டன் ஆஸ்ட்ரோஸ் அணி. இதனால் அந்த அணி வெற்றிபெறும் என பந்தயம் கட்டியிருந்த ஜிம் மெக்வேலுக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் 600 கோடி ரூபாய்) பரிசாக கிடைத்திருக்கிறது.

இதுவரை எவருக்கும் அடிக்காத அதிஷ்டம்

இந்த அணிதான் வெல்லும் - பந்தயம் கட்டிய தாத்தாவுக்கு அடித்த அதிஷ்டம் | Mattress Mack Wins 75M Usd




அமெரிக்க பேஸ்போல் பந்தய வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை இதுவரை யாருமே வென்றதில்லை என்கிறார்கள் உள்ளூர் அதிகாரிகள். டெக்ஸாஸ் மாகாணத்தில் பந்தயத்திற்கு தடை இருப்பதால், லூசியானா மாகாணத்திற்கு சென்று தன்னுடைய விருப்பமான ஹூஸ்டன் ஆஸ்ட்ரோஸ் அணிக்காக பநந்தயம் கட்டியிருக்கிறார் ஜிம். அதுவே அவருக்கு இமாலய பரிசை பெற்றுக்கொடுத்திருக்கிறது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *