Vijay - Favicon

18 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வாழ்ந்தவர் திடீர் மரணம்! வெளியாகிய பின்னணி


பிரான்சின் தலைநகரான பாரீஸில் உள்ள ஒரு விமான நிலையத்தையே வீடாக்கி 18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மெர்ஹான் மரணடைந்துள்ளார்.



ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் மெர்ஹான் கரீமி நாசேரி(77). இவர் தன் தாயைத் தேடி ஐரோப்பியாவுக்குச் சென்றபோது, அவருக்கு ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவர் அந்த நாடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.


இந்த நிலையில், இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு பாரீஸ் நாட்டில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த போது, அந்த விமான நிலையத்தில் உள்ள 2 எப் என்ற பகுதியை தன் வசிப்பிடமாக மாற்றினார்.

மாரடைப்பு

18 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வாழ்ந்தவர் திடீர் மரணம்! வெளியாகிய பின்னணி | Man Who Lived In The Airport For 18 Years Died

இவரால் பெரிதும் கவரப்பட்ட இயக்குனர் ஸ்பீல் பெர்க் இவரது வாழ்க்கையை மையப்படுத்தி தி டெர்மினல் என்ற படத்தை தயாரித்துள்ளார்.



இப்படத்திற்காக அவருக்கு குறிப்பிட்ட தொகை கிடைத்தது. பின்னர், ஒரு விடுதியில் வாழ்ந்து வந்த அவர் சமீபத்தில் விமான நிலையத்திற்கே வந்து தங்கினார்.



இந்நிலையில், மெர்ஹான் கடந்த 12 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *