மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு விநோதமான தடை விதிக்கப்பட்டுள்ளது.
யார்க்ஷயர் பகுதியில் மன்னர் சார்லஸ், கமிலா தம்பதி பொதுமக்களை சந்திக்க சென்றபோது, அவர்களை தாக்கும் நோக்கில் இளைஞர் ஒருவர் அவர்களை நோக்கி முட்டைகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இளைஞர் காவல்துறையால் கைது
பேட்ரிக் தெல்வெல்(23) எனும் அந்த இளைஞர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதியப்பட்டது.
விதிக்கப்பட்ட விநோத தண்டனை
இந்த நிலையில் பேட்ரிக் தெல்வெலுக்கு விநோத தடைகளுடன் பிணை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது குறித்த இளைஞர் பொது இடங்களில் முட்டைகளை எடுத்துச் செல்லக் கூடாது.
அத்துடன் மன்னரிடம் இருந்து குறைந்தபட்சம் 500 மீற்றர் தொலைவில் அவர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக பேட்ரிக் கூறியுள்ளார்.
ஆனால் அவர் மளிகை கடைக்கு செல்லலாம் என பின்னர் மாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.