Vijay - Favicon

அனுமதிப் பத்திரம் இல்லாமல் மரத்தை வெட்டிச் சென்றவர் கைது


அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் மற்றும் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டள்ளது.

குறித்த சம்பவம் யாழ்.வைத்தியசாலை வீதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

யாழ்.மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்திற்கு எந்தவொரு ஆவணங்களும் இல்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *