Vijay - Favicon

வெளிநாட்டில் வேலை செய்ய காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் – வெற்றிடமாகவுள்ள 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள்



இலங்கைக்காக 10,000 வேலை வாய்ப்புகளை மலேசிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 10,000 வேலை வாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்தப் புதிய ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.



கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.



இது குறித்தது அவர் மேலும் கூறுகையில்,

இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் அண்மைய வேலை வாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

1 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டில் வேலை செய்ய காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் - வெற்றிடமாகவுள்ள 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் | Malaysia Job Vacancy For Srilankans Top Salary

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் ஊடாக வெளிநாட்டுப் பணம் அனுப்புவதன் மூலம் 1 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெறுவதே எமது இலக்காகும் என தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த நோக்கத்திற்காக அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பப்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர், இது ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களின் பொறுப்பு என்றும் கூறினார்.


அதோடு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் நலனுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும்.



வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன்களை உள்ளடக்கும் வகையில், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மீறும் நபர்களை நீக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுச நாணயக்கார இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *