Vijay - Favicon

298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் – குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு!


மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.



2014 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் கொல்லப்பட்ட வழக்கில்
குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரண்டு ரஷ்யர்களுக்கும், மொஸ்கோ சார்பு உக்ரேனிய பிரிவினைவாதி ஒருவருக்கும் ஆயுள்
தண்டனை விதித்து நெதர்லாந்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.


இத்தீர்ப்பில் போதியளவு சாட்சி இல்லாத காரணத்தினால் ரஷ்ய சந்தேகநபர் ஒருவர் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறை முடிவு

298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் - குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு! | Malaysia Airlines Fire Blast Netherland Court



மேலும், “நெதர்லாந்தின்-அம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்ற இந்த
விமானம் – கிரிமியா, டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை இணைக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது படைகளை
அனுப்பிய சிறிது நேரத்தில் உக்ரைனுக்கு மேலாக பறந்துக் கொண்டிருந்தது.



இதன்போது, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தரையிலும் வானிலும் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
இதன் காரணமாக உக்ரைனுக்கு மேலாக 32,000 அடி உயர வான்வெளிப்பகுதி விமானப் போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டிருந்தது.


இதனையடுத்து, நெதர்லாந்து பாதுகாப்பு சபை, அமெரிக்க மற்றும் ஜெர்மன் உளவுத்துறை ஆகியவை இந்த விமானம், ரஷ்ய ஆதரவு
பிரிவினைவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக முடிவுக்கு வந்தன.

வழக்கு விசாரணை

298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் - குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு! | Malaysia Airlines Fire Blast Netherland Court

இந்த சம்பவத்தில் 153 சீன பிரஜைகள் உட்படவிமானத்தில் இருந்த 239 பேரும் உயிரிழந்ததாக கருதப்பட்டு வருகிறது.


இதனையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்
அடிப்படையில் மொஸ்கோ சார்பு உக்ரைனியப் போராளிகளால் ஏவப்பட்ட  ஏவுகணையால் விமானம் வீழ்த்தப்பட்டது என்பதை நிரூபித்ததாக
நெதர்லாந்து நீதிமன்ற தலைமை நீதிபதி ஹென்ட்ரிக் ஸ்டீன்ஹுயிஸ் தமது தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார்


இவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை உக்ரைன் அதிபர் வரவேற்றுள்ளார். எனினும் ரஷ்யா அந்தத் தீர்ப்பைக் கடுமையாகச் விமர்சித்துள்ளது”
என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *