பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு இலங்கை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.
மேலும், முதலிகேவை கராபிட்டிய வைத்தியசாலையின் நீதி மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வியாழன் (10) அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தும் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதியரசர்கள் விஜித் மலல்கொட மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி மனு மீதான விசாரணையை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டார்.
விண்ணப்பத்தில் மனுதாரர் வசந்த முதலிகே என்பவராவார், அவர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.
(newsfirst.lk)