Vijay - Favicon

கொழும்பு தாமரை கோபுரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு


பார்வையிடும் நேரத்தில் மாற்றம்

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பார்வையிடும் நேரம் நாளை (20) முதல் பொதுமக்களுக்காக திருத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.


இதன்படி தாமரை கோபுரம் நாளை முதல் வார நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

மூன்று நாட்களில் கொட்டிய வருமானம்

வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை தாமரை கோபுரம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு தாமரை கோபுரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Lotus Tower Opening Closing Times Announced


கொழும்பு தாமரைக் கோபுரத்தின் நெலும் குளுன என அழைக்கப்படும் பகுதிகள் செப்டெம்பர் 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.

கொழும்பில் தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட முதல் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *