Vijay - Favicon

கோடிகளுக்கு அதிபதியான இந்தியர்..! லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்


துபாயில் வசிக்கும் இந்தியரான அலெக்ஸ் வர்கீஸ் என்பவர் 8 கோடி பெறுமதியான லொட்டரியை வென்றுள்ளார்.


துபாய் டூட்டி ஃப்ரீ (DDF) மில்லேனியம் மில்லியனர் (ஒரு மில்லியன் டொலர்) லொட்டரியிலேயே இவர் பெரும் பரிசை வென்றுள்ளார்.


கடந்த 12 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் இவர், துபாயில் உள்ள ஆல் கார்கோ லோஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் தன்னுடன் வேலைபார்க்கும் 9 சக ஊழியர்களுடன் சேர்ந்து இந்த டிக்கெட் வாங்கியுள்ளார்.

மில்லேனியம் மில்லியனர்

கோடிகளுக்கு அதிபதியான இந்தியர்..! லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் | Lottery Winners Jackpot Indian Dubai



கிட்டிய அதிர்ஷடம் குறித்து அலெக்ஸ் வர்கீஸ் கூறுகையில், “எனது பெயரில் நாங்கள் டிக்கெட் வாங்குவது இதுவே முதல் முறை, நாங்கள் இறுதியாக வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.


எனவே அந்தத் தொகையை அவர்களுடன் பகிர்ந்து கொள்வார் என கூறப்படுகிறது.


1999 ஆம் ஆண்டு மில்லேனியம் மில்லியனர் லொட்டரி தொடங்கப்பட்டதில் இருந்து ஒரு மில்லியன் டொலர் பரிசை வென்ற 198ஆவது இந்தியர் அலெக்ஸ் வர்கீஸ் ஆவார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *