Vijay - Favicon

திறைசேரி பணம் வழங்கவில்லை ; தேர்தல் மேலும் தாமதமாகும் – இராஜாங்க அமைச்சர்!


“உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பணம் இதுவரை திறைசேரியிடமிருந்து வழங்கப்படவில்லை, இதனால் தேர்தல் மேலும் தாமதிக்கலாம்.”


இவ்வாறு, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.


தேர்தலுக்கான பணம் மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு நிதி அமைச்சிற்கும், காவல்துறை திணைக்களத்திற்கும் அரச அச்சகர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தாமதிக்கலாம் 

திறைசேரி பணம் வழங்கவில்லை ; தேர்தல் மேலும் தாமதமாகும் - இராஜாங்க அமைச்சர்! | Local Gov Election Political Crises In Sri Lanka

தொடர்ந்து அவர்,


“குறித்த கோரிக்கைகளுக்கு காவல்துறை திணைக்களத்திடம் இருந்து உரிய பதில் கிடைத்துள்ளதுடன், பணத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நிதி அமைச்சிடமிருந்து எந்தவிதமான பதில்களும் இதுவரை வரவில்லை.


முன்னுரிமை அடிப்படையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.” என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *