Vijay - Favicon

கடும் மழையால் தொடர் குடியிருப்பு மீது சரிந்த மண்மேடு – மீட்பு பணிகள் தீவிரம்!


பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த மண்சரிவு ஏற்ப்பட்டுள்ளது.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

5 பேரின் நிலைமை கவலைக்கிடம்

கடும் மழையால் தொடர் குடியிருப்பு மீது சரிந்த மண்மேடு - மீட்பு பணிகள் தீவிரம்! | Landslide Bandaravela Poonagala Last Night

அத்தோடு, பண்டாரவளை, பூனாகலை மகல்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பெய்த கடும் மழையினால், ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல தோட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.


அனர்த்த நிலைமை காரணமாக மூன்று வர்த்தக வீடுகள் மற்றும் தோட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்து கொஸ்லந்த மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


கடும் மழை காரணமாக அந்த பகுதியின் வீடுகளில் இருந்த சுமார் 300 பேர் புனகலை தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கொஸ்லந்த, லியங்கஹவெல மற்றும் பண்டாரவளை காவல்துறை தலைமையகமும் தியத்தலாவ இராணுவ அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *