Vijay - Favicon

மகிந்தா வழங்கிய காணிகளை மீளப்பெறும் அரசாங்கம் – வெளியாகிய காரணம்


முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தி கிரிஷ் மற்றும் டெஸ்டினி இரட்டைக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ள காணிகள் மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படவுள்ளதாக என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.



இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்க தயாராகி வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்.


நகர அபிவிருத்தி அதிகார சபையின் கருத்துப்படி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி கிரிஷ் மற்றும் டெஸ்டினி கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பான முதலீடுகளுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளன.


இதன் காரணமாக, அந்த நிலங்களை மீட்பதற்கு அதிகாரசபைக்கு அதிகாரம் இருப்பதுடன், இந்தத் திட்டங்கள் தொடர்பான மதிப்பீடு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய க்ரிஷ் திட்டம்

மகிந்தா வழங்கிய காணிகளை மீளப்பெறும் அரசாங்கம் - வெளியாகிய காரணம் | Lands Granted By Mahinda Sri Lanka

கொழும்பு, சதம் தெருவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிஷ் கட்டிடம் மற்றும் கொழும்பு 02 இல் நிர்மாணிக்கப்பட்டு வரும் டெஸ்டினி கட்டிடம் வர்த்தக மற்றும் அடுக்குமாடி வசதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.



கோவிட் தொற்றுநோய் தொடங்கியவுடன் அவற்றில் முதலீடு செய்த இந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலீட்டாளர்கள் கட்டுமானப் பணிகளை நிறுத்தி, நாட்டைவிட்டும் வௌியேறிவிட்டனர்.


இரண்டு கட்டிடங்களிலும் வீடுகளை ஒதுக்குவதற்கு நுகர்வோர்களும் பணம் செலுத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.




க்ரிஷ் திட்டம் கடந்த காலங்களில் நிறைய சர்ச்சையை ஏற்படுத்தியது மற்றும் சில தொடர்புடைய பரிவர்த்தனைகள் விசாரணைகளுக்கும் வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *