தனியார் வயல் காணிகளை அபகரித்தே தொல்பொருள் திணைக்களத்தினர் கல் நாட்டியுள்ளார்கள் என தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்புத் தலைவர் ச.சசிகுமார் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொல்பொருள் திணைக்களத்தின் அடாத்தான செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இதனை நாங்கள் யாரிடம் சொல்லது. அதிகாரம் மிக்க அதிகாரிகள் தான் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தொல்பொருள் திணைக்கள ஆக்கிரமிப்பு
தண்ணிமுறிப்பு கிராமம் இப்படியே பாளடைந்து போய்க் கொண்டிருக்கின்றது. குளத்தினையும் வயல் நிலங்களையும் வாழ்வாதரத்திற்கான மாடுகளின் மேச்சல் தரவையினையும் சேர்த்து தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது.
குளத்தினையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை அவர்கள் செய்கின்றார்கள்.
தனியே குருந்தூர் மலையை மட்டும் ஆக்கிரமிப்புச் செய்யவில்லை. 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வாய்க்கால் கட்டையும் சேர்த்தே ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.
நில ஆக்கிரமிப்பு
தற்போது 140 ஏக்கர்கள் வரையில் கல்லுபோட்டுள்ளார்கள். பல மக்களின் காணிகள் என 632 ஏக்கர் காணி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அனைவரும் திரள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.