Vijay - Favicon

ஆரம்பமாகிறது காங்கேசன்துறை-காரைக்கால் இடையேயான கப்பல் சேவை – வெளியானது அறிவிப்பு!


யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக சிறிலங்கா கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரியிலுள்ள காரைக்கால் வரையான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்-காரைக்கால் கப்பல் சேவை

ஆரம்பமாகிறது காங்கேசன்துறை-காரைக்கால் இடையேயான கப்பல் சேவை - வெளியானது அறிவிப்பு! | Kankesanthurai Shipping And Civil Aviation Customs



சிறிலங்கா கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே, காங்கேசன்துறையில் பயணிகளுக்கான சுங்க மற்றும் குடிவரவு – குடியகல்வு சாவடியை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது.

கட்டண அறிவிப்பு

ஆரம்பமாகிறது காங்கேசன்துறை-காரைக்கால் இடையேயான கப்பல் சேவை - வெளியானது அறிவிப்பு! | Kankesanthurai Shipping And Civil Aviation Customs



முதலில் 120 பயணிகள் இந்தக் கப்பலில் பயணிப்பார்கள் எனவும் அவர்கள் 100 கிலோ பொருட்களை தம்முடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதோடு ஒருவருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபா வரை கட்டணமாக அறவிடப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *