கச்சதீவில் துப்பாக்கி முனையில் படையினர் துணையுடன் அமைந்த வையே அந்தோனியார் கோயிலும் புத்தர் கோயிலும் என ஈழம் சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சி தானந்தன் கூறியுள்ளார்.
அவை இரண்டும் கச்சதீவில் அந்நியரால் கட்டப்பட்டவை என குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்தோனியார் ஆலயத்தை கட்டுவதற்காக இடிக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டு பழமையான சிவன் ஆலயத்தின் இடிபாடுகள் நெடுந்தீவில் இன்றும் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
மீறப்படும் பாரம்பரியம்
“கச்சதீவில் புனித அந்தோனியார் திருத்தலத்தைத் தவிர வேறெந்த அடையாளங்களோ, கட்டமைப்புகளோ அமையக்கூடாது என்ற பாரம்பரியம் மீறப்படக்கூடாது”, என்று குறிப்பிட்டு யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் ப. யோ. ஜெபரட்ணம் அடிகள் மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அவரின் இந்தக் கடிதம் தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் “கச்சதீவில் துப்பாக்கி முனையில் படைவீரர் துணையுடன் அமைந்தவையே அந்தோனியார் கோயிலும் புத்தர் கோயிலும்.
அந்தோனியார் மேலை நாட்டவர். புத்தர் வட நாட்டவர். இரு வரும் கச்சதீவுக்கு அந்நியர்
கச்சதீவின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றுச் சிவன் கோயிலின் இடிபாடுகள் (அந்தோனியார் கோயில் கட்டுவதற்காக இடிக்கப்பட்டன) இன்றும் நெடுந்தீவில் உள்ளன.
அகற்ற வேண்டியன ஆக்கிரமிப்புக் கோயில்கள்
அகற்ற வேண்டியன ஆக்கிரமிப்புக் கோயில்கள். அமைக்க வேண்டியன தமிழ் மரபின் அடையாளக் கோயில்கள்.
இலங்கை அரசமைப்பில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. வேறு மதத்தவருக்கு இடமில்லை எனச் சுட்டுவதே இதன் நோக்கம்.
சிவபூமியான மன்னாரைக் கத்தோலிக்க மறைமாவட்டம் வத்திக்கானின் நேரடி ஆட்சியில் உள்ள மாவட்டம் என்பவர் மன்னார் ஆயர்.
இலங்கை அரசின் ஆக்கிரமிப்புக் கொள்கையைப் பின்பற்றி – மன்னார் ஆயரின் ஆக்கிரமிப்புக் கொள்கையைப் பின்பற்றி – யாழ்ப்பாண ஆயரும் கச்சதீவில் பிற மதத்துக்கு இடம் இல்லை என்கிறார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.