பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ள எலோன் மஸ்க் அண்மைக்காலமாக டுவிட்டரில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.
குறிப்பாக டுவிட்டரில் அதிகாரபூர்வக் கணக்குகளுக்கு வழங்கப்படும் ‘நீல வண்ண டிக் குறியீட்டினை‘ (ப்ளூ டிக் ) ஏனையவர்களும் பயன்படுத்த மாதம் 8 டொலர் வசூலிக்கும் திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான கணக்குகள் கட்டணம் செலுத்தி நீல வண்ணக் குறியீடுகளைப் பெற்றன.
இயேசு கிறிஸ்து
அதே சமயத்தில் ஏராளமான போலிக் கணக்குகளும் டிக் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
இது இவ்வாறு இருக்க இயேசு கிறிஸ்துவின் பெயரில் தொடங்கப்பட்ட டுவிட்டர் கணக்கொன்றுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த டுவிட்டரில் கணக்கின் பயோவில் (Bio), தான் ஒரு ‘தச்சர், ஹீலர் மற்றும் கடவுள்’ எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கணக்கினைப் 845.9k பின்தொடர்கின்றனர்.
இக்கணக்கில் வேடிக்கையான டுவிட்கள், பகிரப்பட்டு வருகின்றன.
ப்ளூ டிக்
மேலும், 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கணக்கிற்கு டுவிட்டர் நிறுவனம் தற்போது ப்ளூ டிக்கை கொடுத்துள்ளமை மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போலிக் கணக்குகள் அதிகரித்துள்ளதால் குறித்த ப்ளூ டிக் அம்சத்தினை தற்காலிகமாக
டுவிட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.