Vijay - Favicon

இன்று அரசியல் களத்தில் குதிக்கிறார் ஜனக ரத்நாயக்க


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று அரசியல் களத்தில் இறங்க உள்ளார்.


இதன்படி ‘மஹாஜன் பௌரா’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.


இந்த மாநாட்டில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்டோரும் தமது கருத்துக்களை வெளியிடவுள்ளனர்.



இன்றைய மாநாடு குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு.




சுதந்திரத்திற்குப் பின்னர், இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது நாடு. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் மீது சுமையை அதிகரித்து தற்போதைய அரசாங்கம் சமீபகாலமாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.


ஆனால் இந்த மின் கட்டணத் திருத்தம் நியாயமற்றது என்றும், சாதாரண மின்சார நுகர்வோருக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதற்கு அரசாங்கம் திறன் கொண்டது என்றும் எரிசக்தி துறை வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


மின்சாரக் கட்டணம் எப்படி நியாயமற்ற முறையில் திருத்தப்பட்டது? மக்களுக்கு நியாயமான விலையில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியமான தீர்வுகள் என்ன? சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் சமூகப் பேச்சை உருவாக்கும் நோக்கில் “மஹாஜன் பௌரா” “மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா? இது தொடர்பான பொது மாநாடு 26.05.2023 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த மாநாட்டில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் எரிசக்தி அமைச்சர் சட்டத்தரணி உதய கம்மன்பில, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார பொறியியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சௌமிய குமாரவடு ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *