கடந்த பல காலமாக தமிழர் தாயகம் மீதான வன்முறைச் சம்பவங்கள் வலுவடைந்து வருகின்றது.
இந்தநிலையில், நேற்றையதினம் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த சிவலிங்கம் காணாமல் ஆக்கப்பட்ட செயல் தமிழ் மக்களிடையே மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் தாயகம் மீதான அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
தொல்பொருள் திணைக்களம் அரசின் கைக்கூலியா, மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, கச்ச தீவு எங்கள் சொத்து, குருந்தூர் மலை எங்கள் சொத்து,
வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து, ஐ.எம்.எப் இடம் எடுப்பது பிச்சை தொடர்வது இனவழிப்பா போன்ற பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி மாணவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.