யாழ்ப்பாணம் – நெல்லியடியில் போதைப்பொருளுடன் மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வடமராட்சி பகுதிகளைச் சேர்ந்த மூவரே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடத்திய தேடுதல்
சந்தேக நபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவும், 83 மில்லி கிராம்
ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மோப்பநாயுடன் நடத்திய தேடுதலின் போதே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கரணவாய், தும்பளை,குடவத்தை பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயதுக்குட்பட்ட மூவரே கைது செய்யப்பட்டனர்.