Vijay - Favicon

யாழில் மேற்கொள்ளப்படும் பண மோசடி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களை இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது.


புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு வழங்குவோம் எனக் கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்கின்றனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை 

யாழில் மேற்கொள்ளப்படும் பண மோசடி - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Jaffna Crime Police Warning To Peoples

குறித்த சம்பவங்கள் உடுவில், கோப்பாய், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களில் இடம் பெற்றிருந்த நிலையில், நேற்றைய தினம் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் இடம்பெற்றுள்ளது.


குறித்த மோசடிக்காரர் இன்றைய தினம் ஊர்காவற் துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணை பகுதியில் NP HZ – 3125 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிளில் நடமாடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.


எனவே, குறித்த நபர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.


ஆகவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஊர்காவற் துறை பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.   



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *