இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது.
லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள்
ஆனால் அதை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் தலைநகர் டெல் அவிவில் திரண்டு போராட்டம் நடத்துகின்றனர்.