ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் குஜராத் அணி அசத்தல் வெற்றியை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இன்றைய தினம் குஜராத் அணிக்கும் மும்பைக்கும் அணிக்கும் இடம்பெற்ற பலப்பரீட்சையில் குஜராத் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
அதேவேளை, இந்த ஆட்டத்தில் படுதோல்வியடைந்த மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
அதிரடியாக ஆடிய சுப்மன் கில் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இறுதி போட்டி
முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 233 என்ற அபார ஓட்டங்களை பெற்றது. குறிப்பாக போட்டியில் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 60 பந்துகளில் 129 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
234 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய மும்பை அணி 171 ஓட்டங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் சென்னை அணி மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.