Vijay - Favicon

உக்ரைனில் மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்


மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள்

ரஷ்யப் படைகளின் பிடியில் இருந்த இலங்கை மாணவர்கள் 07 பேர் உக்ரைன் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக வெளியான செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உக்ரைன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.



உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 7 இலங்கை மாணவர்கள் அவர்களது படையினரால் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜஅதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த ஏழு இலங்கை மாணவர்கள், ரஷ்ய சித்திரவதை அறைகளில் கட்டிடம் ஒன்றின் அடித்தளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக உக்ரைனின் அதிபர் செலென்ஸ்கி  அறிவித்திருந்தார்.

உக்ரைனில் மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல் | Information About Sri Lankan Rescued In Ukraine

ரஷ்ய படை மறுப்பு

உக்ரைன் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவ கவனிப்புக்கு அனுப்பப்பட்டனர் என்றும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.



இதனிடையே, இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தியை மறுக்கும் கார்கிவ் பகுதியின் ரஷ்ய தலைவர் விட்டலி கஞ்சேவ், உக்ரைன் படைகள் இலங்கையர்களை கைது செய்து இரகசிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *