முக்கிய மயக்க மருந்தின் பாவனையை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் சத்திர சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மூன்று வகை மருந்துகளின் பயன்பாடு தற்காலிகமாக மீளப்பெறப்பட்டுள்ளது.
குறித்த மருந்துகள் இந்திய கடன் திட்டத்தின் கீழ், இந்திய மருத்துவ நிறுவனத்தால் இலங்கைக்கு விநியோகிக்கப்பட்டிருந்தது.
மருந்தின் தரம்
இலங்கைக்குள் மருந்தின் தரத்தை சோதனை செய்ய முடியாது என்ற நிலைமையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளில் மருந்தின் செயல்திறன் மற்றும் இந்தியா வழங்கிய மருந்திற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.