Vijay - Favicon

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் நீதவான் பிறப்பித்த உத்தரவு!


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய கடற்தொழிலாளர்கள் மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



குறித்த 15 பேரும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் சிறிலங்கா கடற்படையினரால் கடந்த 6 ஆம் திகதி 15 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றில் முன்னிலை

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் நீதவான் பிறப்பித்த உத்தரவு! | India Fisher Man Released Sri Lanka Navy Court


கைது செய்யப்பட்டவர்களில் 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தோடு 14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.



இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 14 இந்திய கடற்தொழிலாளர்களும் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்ட 14 வயது சிறுவனும், மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.



இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்தொழிலாளர்களுக்கு தலா ஒரு வருட சிறைத்தண்டனையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து விடுதலை செய்தார்.

இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு நீதவானின் உத்தரவு

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் நீதவான் பிறப்பித்த உத்தரவு! | India Fisher Man Released Sri Lanka Navy Court



இதனையடுத்து 15 பேரும் மிகிரியாகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அவர்களை நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.



மேலும் படகு ஒன்றின் உரிமையாளர் இன்றைய தினம் சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது படகை விடுவிக்குமாறு கோரி மன்றில் விண்ணப்பம் செய்தார்.



இதனையடுத்து குறித்த படகின் உரிமையாளரை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.  



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *