Vijay - Favicon

யாழில் அதிகரிக்கும் யாசகர்களின் தொல்லை – கண்டுகொள்ளாத அதிகாரிகள்!


யாழ்.நகாில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசெளகரியப்படுத்தும் யாசகா்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்கள் தொடா்பாக பொறுப்பு வாய்ந்தவா்கள் உாிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்கள் கோாிக்கை விடுத்திருக்கின்றனா்.



யாழ்.நகருக்கு தினசாி பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், யாசகா்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசாி அதிகாித்து வருவதாக வா்த்தகா்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.



குறிப்பாக இவ்வாறான நபா்கள் பொதுமக்களை அவதுாறாக பேசுவதுடன், வெளிநாட்டிலிருந்து வரும் புலம்பெயா் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடலில் தொடுவது, அவா்களை அவதுாறாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனா்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

யாழில் அதிகரிக்கும் யாசகர்களின் தொல்லை - கண்டுகொள்ளாத அதிகாரிகள்! | Increasing Number Beggars Jaffna Public Impact

இந்த விடயம் யாழ்.மாநகரசபை மற்றும் காவல்துறை உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த சகலருக்கும் தொிந்திருந்தும், தொியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.



இவ்வாறான நடவடிக்கைகளினால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறையும் அபாயமும் உள்ளது.



இந்நிலையில் சித்திரை புத்தாண்டு காலம் நெருங்குவதால் தற்போதுள்ள இந்த மோசமான நிலமை மேலும் தீவிரமடையலாம்.


எனவே பொறுப்பு வாய்ந்தவா்கள் சித்திரைப் புத்தாண்டு காலத்திற்கு முன்னா் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் கோாிக்கை விடுத்துள்ளனா்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *