Vijay - Favicon

இலங்கையில் கிடுகிடுவென அதிகரித்த ஆணுறை விற்பனை


இலங்கையில் அண்மைய நாட்களில் வழமைக்கு மாறாக ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் (FPA) தெரிவித்துள்ளது.


குறித்த ஒரு தர அடையாளத்தின் (brand) ஆணுறைகள் தொலைதூரப் பிரதேசங்களிலும் வேகமாக விற்பனையாவதாக FPA இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷாரா ரணசிங்க கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இரண்டு வழிகளில் பாதுகாப்பு 

இலங்கையில் கிடுகிடுவென அதிகரித்த ஆணுறை விற்பனை | Increased Condom Sales In Sri Lanka


கருத்தரித்தலில் இருந்து மட்டுமன்றி பாலினம் மூலம் கடத்தப்படும் நோய்களிலிருந்தும் ஆணுறைகள் இரண்டு வழிகளில் பாதுகாப்பு செய்கின்றன. எமது இளைய சமுதாயத்தை பாதுகாக்க ஆணுறைப் பயன்பாடு ஒரு சிறந்த வழியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


இன்னும், சில கலாசார நம்பிக்கைகளால் மக்கள் ஆணுறைகளை வாங்குவதற்குத் தயங்குகின்றனர்.

பரபரப்பான பகுதிகளான புகையிரத நிலையம், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொருள் வழங்கும் தன்னியக்க இயந்திரங்களினூடாக (vending machine ) ஆணுறைகளைப் பெறக்கூடிய வழிமுறையை முன்னெடுக்க FPA முன்வந்த போதும் அதற்கான அனுமதிகளைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளது.

இலங்கையில் கருத்தடை

இலங்கையில் கிடுகிடுவென அதிகரித்த ஆணுறை விற்பனை | Increased Condom Sales In Sri Lanka

 இலங்கை கிட்டத்தட்ட 68 சதவீத கருத்தடை பரவல் வீதத்தைக் கொண்டுள்ளதுடன் பிராந்தியத்தில் மிக உயர்ந்த கருத்தடைப் பரவல் வீதத்தையும் கொண்ட நாடுகளில் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *