மின் கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிப்பு
புதிய மின் கட்டண அதிகரிப்பின் பிரகாரம் தமது ஆலயத்தின் மின் கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக வணக்கத்திற்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கோவிலின் புதிய மாதாந்திர மின் கட்டணம் 12,000 ரூபாயாக இருந்த நிலையில்,தற்போது 60,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், ஆனால், அந்த தொகையை தன்னால் செலுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மாதாந்தம் செலுத்தும் 12,000 ரூபாயை மட்டும் தொடர்ந்து கொடுப்பதாக குறிப்பிட்டார்.
தொழிலதிபர்களுக்கு ஏன் இந்த சலுகை
கோவில்களில் 180க்கு மேல் மின் அலகுகள் இருந்தால் யூனிட்டுக்கு 65 ரூபாயும், 180 யூனிட்டுக்கு மேல் உள்ள வணிக இடங்களில் யூனிட்டுக்கு 32 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக அவர் கூறுகிறார்.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்படாத சலுகைகள் எந்த அடிப்படையில் தொழிலதிபர்களுக்கு வழங்கப்படுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.