உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடவில்லை எனவும், இலங்கையில் தேர்தல்களை ஒத்திவைக்க சிபாரிசு செய்யவில்லை என சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாக்கி, அடுத்த இரண்டு நாட்களில் கடனின் முதல் தவணை விடுவிக்கப்படும் என்றார்.
கொடுப்பனவுகளை ரூபாவாக மாற்றி அரசாங்க கடன்கள் மற்றும் இதர செலவினங்களைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.