சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கை அதிபரால் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கோரிக்கை
நிதி இராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் கூறுகையில்,
“சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு இன்று வோஷிங்டனில் கூடுகிறது.
அதன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், இலங்கையின் கோரிக்கையை விவாதிக்கவே குறித்த நிர்வாகக் குழு கூடுகிறது.
இந்த உடன்படிக்கை மார்ச் 22இற்கு பிறகு நாாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
பணியாளர் மட்ட உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
வெளிப்படைத்தன்மை
சில குழுக்கள் இந்த செயன்முறையை ஒரு தந்திரமாக சித்தரிக்க முயற்சித்தன.
ஆனால், அரசாங்கமாக நாங்கள் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம்,” என்று அவர் கூறினார்.