Vijay - Favicon

ரணில் இல்லையென்றால் உலக வரைபடத்தில் இருந்து காணாமற்போயிருக்கும் இலங்கை


ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்காமல் இருந்திருந்தால், இலங்கையை இன்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.


டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெறுவதற்கு மூலோபாய நடவடிக்கைகளே காரணம் என்று சில தந்திர அரசியல்வாதிகள் கூறினாலும், டொலரின் தேவை மற்றும் விநியோகத்தால் ரூபாயின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்பதே யதார்த்தம் என்றும் அவர் கூறினார்.



ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கைப்பற்றவில்லையென்றால், இன்று இலங்கையை உலக வரைபடத்தில் கூட காண முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சார விநியோகங்கள் சீர்குலைவு

ரணில் இல்லையென்றால் உலக வரைபடத்தில் இருந்து காணாமற்போயிருக்கும் இலங்கை | If Not For Ranil Sri Lanka Disappeared World Map

ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற போது அத்தியாவசிய சேவைகளான எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சார விநியோகங்கள் முற்றாகத் தடைப்பட்டிருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.


ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றது முதல், அவர் அந்தச் சிக்கல் நிலைகளில் இருந்து நாட்டை விடுபட வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *