Courtesy: Gunadharshan
ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழிகாட்டல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர வகுப்பில் ஊடக பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் இன்றைய தினம் ஐ.பி.சி தமிழிற்கு கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
அவர்களின் கற்றலுக்கு வலு சேர்க்கும் முகமாக வழிகாட்டல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
ஊடகதுறை அனுபவம்
எதிர்காலத்தில் ஊடகதுறையில் பிரவேசிப்பதற்கான வழிகாட்டலாக இக்கருத்தரங்கு அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.