தமக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டும் எனவும், தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்காததால் பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகவும் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
தான் மூத்தவர் என்றும் நாட்டுக்காக உழைத்தவர் என்றும் கூறினார்.
விரைவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என செய்திகள் வெளியாகி உள்ளதாகவும் எனவே தனக்கு அமை்சு பதவி வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.