இலங்கையில் கடந்த ஆண்டு சடுதியாக அதிகரித்த, உணவுப் பொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, அதிகரித்த பண வீக்கம் என்பவற்றால் உள்நாட்டுக்குள்ளளேயே அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக பல மனித உரிமை மீறல்களும் நாட்டிற்குள் இடம்பெற்றிருந்தன என அமெரிக்கா குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இராஜாங்க செயலர் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“கடந்த 2022 ஆம் அண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை, தொடர் மின்வெட்டு, அதிகரித்துச் சென்ற உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியால் நாடு உள்நாட்டு அமைதியின்மைக்கு தள்ளப்பட்டது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு
இவ்வாறான நிலையிலேயே இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கத் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்காகவும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள்
இந்த குற்றச்சாட்டை அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் நேற்று வெளியிடப்பட்ட மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த நாடுகளுக்கான அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.