பிரமாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) புதிதாக அமைக்கப்பட்டுள்ள முல்லை ஓய்வகம் (Hotel – Mullai) மற்றும் றீச்சா தேவாலயம் (reecha Church) என்பன நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
நாளைய தினம் (11 – ஏப்ரல் – 2023) காலை 11 மணியளவில் றீச்சா தேவாலயமும், மதியம் 12 மணியளவில் முல்லை ஓய்வகம் எனும் பெயரில் 35 அறைகளுடன் கூடிய விடுதியும் (hotel – mullai) திறந்து வைக்கப்படவுள்ளது.
முல்லை ஓய்வகத்தினை ராசையா ரஞ்சித் லியோன் (லண்டன்) அவர்கள் திறந்து வைக்கவுள்ளதுடன், றீச்சா தேவாலயத்தை அருட்தந்தை அன்புராசா, அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் அருட்சகோதரர் ஜெனிஸ்ரன் ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர்.