Vijay - Favicon

மோசமான உணவுப் பணவீக்கம் இலங்கைக்கு கிடைத்த இடம்


உலக வங்கியின் புதிய அறிக்கை

53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலின்படி , 2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.

இலங்கையில் உணவுப் பணவீக்கம்


இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளது.

மோசமான உணவுப் பணவீக்கம் இலங்கைக்கு கிடைத்த இடம் | Highest Food Price Inflation Sri Lanka Top5

உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடு சிம்பாப்வே, இது 353 சதவீதம்.
லெபனான் மற்றும் வெனிசுலா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
துருக்கி, ஈரான், ஆர்ஜன்ரீனா, மால்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகள் ஆகும் .

Gallery



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *