வளிமண்டலவியல் திணைக்களத்தால் 14 மாவட்டங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை கிடைக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் வெளியக நடமாட்டத்தை குறைத்துக்கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.