தொடருந்தின் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்ட சிசுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சிசுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிணை வழங்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்களான இளம் தம்பதியினருக்கு இன்று திருமணம் இடம்பெறவுள்ளதாகவும், பின்னரே இவர்கள் விளக்கமறியலில் வைக்கத் தயாராக இருப்பதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி லக்ஷான் டயஸின் தெரிவித்திருந்த நிலையில் நீதவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
டி.என்.ஏ அறிக்கை
டி.என்.ஏ அறிக்கைகளுக்காக குழந்தை மற்றும் சந்தேக நபர்கள் வருகின்ற 21ம் திகதி காலை 9 மணிக்கு அரச பரிசோதகர் முன் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குறித்த இளம் தம்பதிகளை தலா 5 இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் நீதிமன்றம் விடுவித்துள்ளது.