கொழும்பு – அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (26) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
முகமூடி அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய திருமணமாகாத ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவிசாவளை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.