13 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவன் மாலையில் தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டு வத்தேகம நகருக்கு அருகில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சி
இதன்போது அந்த மாணவனை ஏமாற்றி, கொங்கிரீட் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு தாத்தா முயன்ற போதே, அவரிடமிருந்து மாணவன் தப்பியோடியுள்ளார்.
மாணவனின் வயதுடைய பேரன்கள்
பன்வில பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனக் கூறப்படும் சந்தேகநபருக்கு பாலியல் வன்கொடுமை செய்யச் சென்ற மாணவனின் வயதுடைய பேரன்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வத்தேகம காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் கபில பண்டாரவின் பணிப்புரைக்கமைய, காவல்துறை பரிசோதகர் வத்சலா மிஹிராணி, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.