மேல்மாகாணத்தில் தரம் 10 மற்றும் 11க்கான இரண்டாம் தவணை விஞ்ஞானப் பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதால் பல பாடசாலைகளில் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வலயக் கல்வி அலுவலகங்கள் மூலம் பரீட்சை தாள்கள் தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட பின்னர் பாடசாலைகளின் பரீட்சை திணைக்களத்தினால் உரிய திகதியில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட விஞ்ஞான வினாத்தாள் நேற்றைய தினம் (17) வெளியாகியுள்ளதாக வெளியான தகவலையடுத்து அதனை இடைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளை அதிபர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தாம் உத்தரவிட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
ஆதாரம்: மவ்பிம