Vijay - Favicon

இலங்கைக்கு தங்கம் கடத்திய எம்.பி..! நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை


நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தியமை தொடர்பில் நாடாளுமன்றில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


அதாவது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமான முறையில் 3 கிலோ கிராம் தங்கத்தை அதாவது ஏழு கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கம் மற்றும் பல நவீன கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தமை நாடாளுமன்றத்தின் அவதானத்துக்குரிய விடயமாகும்.


குறிப்பாக விமான நிலையத்தில் உள்ள அதிதிகள் வருகை முனையத்தின் ஊடாக சட்டவிரோதமாக இந்த பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்ற சலுகைகள் மற்றும் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளார்.

நடத்தை விதிமுறைகள் 

இலங்கைக்கு தங்கம் கடத்திய எம்.பி..! நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை | Gold Smuggling Gold Necklaces New Phones

எனவே, 07 மார்ச் 2018 ஆந் திகதி அன்று நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிமுறைகள் இதன் மூலம் முழுமையாக மீறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் கொண்டு வரும் ஆணைகள் மற்றும் விதிகளை நிறைவேற்ற ஆதரவு அளிக்கும் அரசாங்க உறுப்பினர்களாலையே குறித்த அரசாணைகள் மற்றும் விதிகள் மீறப்படுவதற்கு செயற்படுவதானது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் ஆளும் எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்கள் மீதும் மக்களின் நம்பிக்கை அற்றுப் போகும்.



இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் நாட்டு மக்களும் கூட சட்ட விதிகளுக்கு கீழ்படியாமல் போகலாம்.

கடுமையான நடவடிக்கை

இலங்கைக்கு தங்கம் கடத்திய எம்.பி..! நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை | Gold Smuggling Gold Necklaces New Phones

இலங்கை சுங்கத்துறையினர் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு 75 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொண்டு வரப்பட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



எவ்வாறாயினும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் தொடர்பில் நாடாளுமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எனவே,நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் மேற்கொண்டு வரும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களைத் மேலும் முன்னெடுக்காமல் இருக்க இந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இந்தப் நாடாளுமன்றம் பிரேரணைப்படுத்துகிறது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *