Vijay - Favicon

ஜெர்மனியில் பிரபல நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு..! – ஊழியர்களின் நிலை கேள்விக்குறியில்


ஜெர்மனியில் வசிக்கும் ஆயிரகணக்கானோருக்கு புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


ஜெர்மனி நாட்டில் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை மூடவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதனால் பலர் தங்களுடைய பணிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வேலை இழக்கும் அபாயம்

galeria kaufhof german





ஜெர்மனியில் பிரபல வர்த்தக ஸ்தபனமான கெலரியா கப் கொப் நிறுவனமானது தனது கிளை நிறுவனங்களில் அதாவது மொத்தமாக இருக்கின்ற 129 கிளைகளில் 52 கிளைகளை மூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த 52 கிளைகள் மூடப்பட்டால் அதில் பணியாற்றும் 4500க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த கெலரியா கப் கொப் நிறுவனமானது ஒஸ்றியா நாட்டினுடைய பிரபல வர்த்தகர் பென்கு என்பவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.

பாரிய வீழ்ச்சி 

ஜெர்மனியில் பிரபல நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு..! - ஊழியர்களின் நிலை கேள்விக்குறியில் | Germany Company Close That Shocked News Employe




இதேவேளையில் இந்த கெலரியா கப் கொப் னுடைய நிகழ்நிலை(online) ரீதியிலான வியாபாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது கொரோனா காலங்களில் இந்த வியாபாரம் பாரிய அளவில் உயர்வடைந்துள்ளது. அதாவது கொரோனா காலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தினால் இலகுவில் இந்த வியாபாரம் பாரிய உயர்ச்சியை அடைந்துள்ளது.



தற்பொழுது கொரோனா நீங்கிய பின் இந்த வியாபாரத்தில் பாரிய வீழ்ச்சி சந்தித்துள்ளதால் இவ்வகையான சில நடைமுறைகளை இந்த நிறுவனமானது மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *