ஐ.நா மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரை மையப்படுத்தி ஜெனிவாவில் உள்ள மனித உரிமைப் பேரவை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பெரும் மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் எனக் கோரி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இந்தப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
நீதிகோரிய ஈழத் தமிழர்கள்
ஐ.நா மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரை மையப்படுத்தி ஜெனிவாவில் உள்ள மனித உரிமைபேரவை முன்றலில் புலம்பெயர் தமிழ் மக்களால் இந்தக் கவனயீர்ப்பு நடத்தப்பட்டது.
இன்றைய போரட்டத்தில் நெதர்லாந்தில் இருந்து 1500 கிலோமீற்றர் தூரத்தை மிதிவண்டியில் கடந்து ஜெனிவாவை வந்தடைந்த அறவழிப் போராட்டகாரர்களும் பங்கெடுக்கின்றனர்.
பலத்த கோஷங்களுடன் போராட்டம்
ஐ.நாவே கண்ணைத் திற, எமக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.