Vijay - Favicon

கனடாவுக்கு சீனா கடும் செய்தி – ட்ரூடோ உடன் பதிலடி


உங்களிடம் நேர்மை இல்லை என சீன அதிபர் ஜி ஜின்பிங் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கோபமாக கூறியுள்ளார்.


ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் சந்தித்து கொண்டனர்.


மாநாட்டின்போது இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பேசிக்கொண்ட விடயங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து சீன அதிபர் “இருநாடுகள் இடையே நடக்கும் விவாதங்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் செய்தித்தாள்களுக்கு கசிந்துள்ளது. இது சரியானதாக இல்லை” என மொழிபெயர்ப்பாளர் உதவியோடு குற்றம் சாட்டிப்பேசினார்.

குறுக்கிட்ட ஜின்பிங்

கனடாவுக்கு சீனா கடும் செய்தி - ட்ரூடோ உடன் பதிலடி | G20 Xi Trudeau Leaks Media China Canada Relation


இதை கேட்ட ஜஸ்டின் ட்ரூடோ, ‛‛நாங்கள் வெளிப்படை தன்மையை விரும்புகிறோம். இதனைத் தான் தொடர்ந்து செய்வோம்” எனக் கூறினார்.



ஆக்கபூர்வமாக சேர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வோம். ஆனால், நாம் உடன்பாடு காணமுடியாத விடயங்களும் இருக்கும்,” என ட்ரூடோ கூறினார்.


அவர் பேசி முடிக்கும் முன்பாகவே குறுக்கிட்ட ஜின்பிங், “அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள்” என்று கூறிவிட்டு ட்ரூடோவின் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு நகர்ந்து சென்றுள்ளார். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *