மக்கள் வங்கி மற்றும் வங்கி அமைப்பில் நடந்ததாக கூறப்படும் பல பெரிய அளவிலான முறைகேடுகள் குறித்த விவரங்களை பிரகதி வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்கப் பொருட்களை திருடுவது மற்றும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பின் எண்களை திருடி பண மோசடி செய்தல் உட்பட சில வங்கி அதிகாரிகளின் திருட்டு சம்பவங்களை நிர்வாகம் மறைத்துள்ளதாக PBEU மக்கள் வங்கி கிளையின் பிரதி செயலாளர் RUWK திஸாநாயக்க தெரிவித்தார்.
‘மீ மஸ்ஸூ’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது அவர் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
திஸாநாயக்க, பிரதான அரச வங்கியொன்றின் சிரேஷ்ட ஊழியர்கள் வாகன மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியதோடு, சில வங்கிகள் தமது ஊழியர்களுக்காக வருமான வரி செலுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்த சம்பவங்களை செய்தி வெளியிடுவதை தடுப்பதற்காக ஊடக நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேர்காணலை இங்கே பாருங்கள்: