Vijay - Favicon

சுற்றுலா பயணிகளிடம் பலவந்தமாக பணம் பறிக்கும் கும்பல் – மடக்கி பிடித்த காவல்துறை..!


சுற்றுலாப் பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி பணம் சம்பாதிக்கும் 6 பேர் நேற்று கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.



காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இவர்களை கைது செய்துள்ளதுடன், இந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



தரகு பணம் வாங்கும் இந்த தரகர்கள், விமான நிலையத்தின் ஆரம்ப முனையத்தின் முன்பு காத்திருந்து, முகவர்கள் இல்லாமல் நாட்டிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளை வாகனங்களில் ஏறும்படி வற்புறுத்துவதை அவதானிக்க முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணை

சுற்றுலா பயணிகளிடம் பலவந்தமாக பணம் பறிக்கும் கும்பல் - மடக்கி பிடித்த காவல்துறை..! | Forcing Tourist Gang Arrest Police Investigation


அதுமட்டுமல்லாமல் இலங்கைக்கு வரும் நபர்களின் பயணப்பொதிகளை வலுக்கட்டாயமாக ஏற்றி அவர்களை மிரட்டி பணம் பறிப்பதுடன், அவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.



இவ்வாறு செயற்படும் ஏனைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என குறித்த விசாரணையுடன் தொடர்புடைய சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *